முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதவி வேளாண் அலுவலர் தேர்வு முடிவுகள்: 3 மாதங்களில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை ஏப் 20-

உதவி வேளாண் அலுவலர் தேர்வு முடிவு 3 மாதங்களில் வெளியிடப் படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணியில் 417 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 நகரங்களில் நேற்று எழுத்துத்தேர்வு நடந்தது.
முதல் தாளான வேளாண்மை தேர்வு காலையிலும், 2-வது தாளான பொது அறிவு தேர்வு பிற் பகலும் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் 3,200-க்கும் மேற்பட் டோர் தேர்வெழுதினர்.

சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பி.ஏ.கே. பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், “உதவி வேளாண் அலுவலர் தேர்வை முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. எழுத்துத் தேர்வு முடிவு 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து