முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகம் தடுப்பணை கட்டுவதை தடுக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

சென்னை, ஏப். 20–

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு உரிய தண்ணீர் தராமல் இருக்கின்றது. கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. அதற்காக பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கியுள்ளது.
தற்போது அம்மாநிலத்தின் முதல்–அமைச்சர் அணை கட்டும் முடிவை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. எனவே பிரதமர் இனியும் காலம் தாழ்த்தாமல் கர்நாடக முதல்–அமைச்சரின் இப்பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்களின் தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிட வலியுறுத்த வேண்டும்.

தடுப்பணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் எந்த ஒரு அனுமதியும் தரக்கூடாது. மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறை ஆணையம் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மத்திய அரசு கர்நாடக அரசிடம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழகத்திற்கு உரிய தண்ணீர் வழங்கிட வலியுறுத்த வேண்டும்.

அப்போதுதான் தமிழக விவசாயிகளின் உயிர்நாடியான விவசாயம் பாதிக்காமல் தழைத்தோங்கும். தமிழகத்தின் குடிநீர் தட்டுப்பாடும் ஓரளவிற்கு நீங்கும்.மத்திய அரசு தமிழக மக்களின் நலன் கருதி இது போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். தமிழக மக்களின் நலன் காக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து