முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று துவக்கம்

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் 30ம் தேதி மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஆணஅடுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நடப்பாண்டிற்கான திருவிழா, இன்று காலை 10.36 மணி முதல் 12 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அன்று இரவு சுவாமி சுந்தரேல்வரர் சிம்ம வாகனத்திலும், மீனாட்சி அம்மன் விருட்சகம் வாகனத்தில் 4 மாசி வீதிகளில் உலா வருவார்கள். அன்று முதல் நாள்தோறும் அம்மன், சுவாமி, பிரியாவிடை ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருள் மாசி வீதிகளில் வலம் வர உள்ளனர்.

முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.28ம் தேதி இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. மறுநாள் திக்கு விஜயம், ஏப்.30ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் நடைபெற உள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வநஅத வணஅணம் உள்ளனர். கோயில் நிர்வாகம் சார்பில் 6,000 இலவச டிக்கெட்கள் இன்று முதல் ஏப்.25 வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து, பக்தர்கள் பெற்று கொள்ள ஏற்பாடுகள் செய்துள்ளனர். மேலும் ரூ.200, ரூ.500 என இருவகையான டிக்கெட்கள் கோயில் அலுவலகம் மற்றும் தெப்பக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பளஅளியில் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருக்கல்யாணத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக 250 டன் கொண்ட திறந்தவெளி ஏசிவசதி, பக்தர்கள் அமர கோயிலில் உள்ள வடக்கு - மேற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டப மனமேடை அழகிய மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் அமரும் இரண்டு வீதிகளிலும், அழகிய பந்தல் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. மே 1ம் தேதி மீனாட்சி, சுவாமி, பிரியாவிடையின் தேரோட்டம் நடைபெறுகிறது. 4 மாசி வீதிகளிலும் தேர் பவனி வரும். மே 2ம் தேதி கோயில் தெப்பத்தில் தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் விழா நிறைவு பெற உள்ளது.

திருவிழாவை முன்னிட்டு அம்மன், சுவாமி வீதி உலாவில் பல்வேறு திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். இதற்காக அம்மன், சுவாமி ஏறி வலம் வரும் சிம்மம், யாழி, யானை உள்ளிட்ட வாகனங்கள் சுத்தம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது. கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தாக்கர் கருமுத்து கண்ணன் மற்றும் இணை ஆணையர் நடராஜ் செய்து வருகின்றனர்.

திருக்கல்யாண நிகழ்ச்சியை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக, போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் துணைக் கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட வெளி மாவட்ட போலீசார் உள்பட 2,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் சோதனையில் ஈடுபட உள்ளனர். மற்ற நாட்களிலும் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து