முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவும் சீனாவும் இலங்கைக்கு ஆதரவாக செயல்படவில்லை: ரணில் விக்ரமசிங்கே

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

இந்தியாவும், சீனாவும் இலங்கைக்கு ஆதரவாக செயல்படவில்லை என்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கடல் எல்லையை தாண்டும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று ரணியில் கூறியிருந்தார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 

இந்த நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே , கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்குச் சென்று, நேற்று முன்தினம் துலாபாரம் எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினார்.

அப்போது, மீனவர் பிரச்சினையில் கூறிய கருத்துகள் பற்றி அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, இலங்கை மக்களின் எண்ணங்களையே இலங்கை அரசும் பிரதிபலிக்கின்றது என்றார். மேலும், இந்தியா - இலங்கை உறவு குறித்து அவர் கூறும்போது, இந்தியப் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணமும், இந்தியாவுக்கு சிறிசேனா மேற்கொண்ட பயணமும் இரு நாடுகளுக்கு இடையே ஆன உறவை வலுபடுத்த உதவியது.

இதைத் தவிர இந்தியாவுக்கும் சரி, சீனாவுக்கும் சரி, இரு நாடுகளுக்குமே இலங்கை ஆதரவான போக்கில் செயல்படவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து