முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்.

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின்போது முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களைக் குவித்தது. பின்னர் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. நடப்புத் தொடரில் தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்து விரக்தியில் இருந்து வந்த மும்பைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். அதேசமயம், பெங்களூரு அணிக்கு இது 2வது தோல்வியாகும்.

முன்னதாக மும்பை இந்தியன்ஸின் பேட்டிங்கின்போது லென்டில் சிம்மன்ஸ் மற்றும் உன்முக்த் சந்த் ஆகியோர் ஆளுக்கு ஒரு அரை சதம் போட்டு பெங்களூர் பந்து வீச்சை பதம் பார்த்து விட்டனர். சிம்மன்ஸ் 59 ரன்களையும், சந்த் 58 ரன்களையும் குவித்தனர். கேப்டன் ரோஹித் சர்மா தன் பங்குக்கு 15 பந்துகளில் 42 ரன்களைக் குவித்து அசத்தினார். பெங்களூர் பந்து வீச்சை நாலாபுறமும் அவர் சிதறடித்தார். கடைசியில் இளம் வீரர் ஹர்திக் பாண்ட்யா, 6 பந்துகளில் 16 ரன்களை விளாசி பெங்களூர் பந்து வீச்சை ரொம்பவே டீஸ் செய்து விட்டுப் போனார்.

இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிரங்கிய பெங்களூரு அணி கிறிஸ் கெய்லைத்தான் பெரிதும் நம்பியுள்ளது. 24 பந்துகளைச் சாப்பிட்ட கெய்ல் 10 ரன்களில் நடையைக் கட்டும் நிலை ஏற்பட்டது. மிகப் பெரிய ஸ்கோரை சேஸ் செய்த பெங்களூரு, முதல் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பலவீனத்தைக் காட்டுவதாக அமைந்தது.

கேப்டன் வீராட் கோலி, திணேஷ் கார்த்திக் ஆகியோர் சற்று பெரிய அளவில் ஆட முயற்சித்தனர். நம்பிக்கையும் இருந்தது. ஆனால் இருவரும் ஆளுக்கு 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். எ.பி. டி.வில்லியர்ஸ்தான் அசத்தி விட்டார். 11 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் அதிரடியாக ஆடி 41 ரன்களைக் குவித்து அசத்தினார். ஆனாலும் அது உதவவில்லை.
அதேபோல டேவிட் வீஸ் 25 பந்துகளில் 47 ரன்களைக் குவித்தார். அதுவும் பெங்களூருக்கு கை கொடுக்கவில்லை. முன்னால் ஆடியவர்கள் சொதப்பியதால் இவர்களின் அதிரடி பலன் தராமல் போய் விட்டது. பெங்களூர் அணி தனது கடைசி ஓவரில் 28 ரன்களை எடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தது. போலார்ட் பந்து வீசினார். அந்த ஓவரில் வெறும் 9 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது பெங்களூரு அணியால்.

மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார். இதன் மூலம் தனது 100வது ஐபிஎல் போட்டியில் 100 விக்கெட்களைச் சாய்த்து சாதனை படைத்தார். தொடர்ந்து 4 தோல்விகளை கண்டு அணிகள் வரிசையில் கடைசியில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது முதல் வெற்றியாகும். அதே சமயம் பெங்களூர் அணியும் இந்த ஐபிஎல் இல் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்த ஆட்டத்துடன் சேர்த்து 2 தோல்விகளும், 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து