முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மது பாரில் பீர் குடித்ததால் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட். சமீபத்தில் இவர் மது பாரில் பீர் குடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவர் சிட்னியில் உள்ள மது பாரில் தனது கிளாசில் ஊற்றப்பட்ட 425 மி.லி. பீரை 6 வினாடிகளில் ஒரே மூச்சில் குடித்து முடித்தார். இது சமூக வலைதளங்களில் விவாத பொருளாகி விட்டது.

அதாவது கடந்த 1983 முதல் 1991 வரை பிரதமராக இருந்த பாப்ஹாவ்க்கும், டோனி அபோட்டுக்கும் பீர் குடிக்கும் போட்டி வைத்தால் யார் முதலில் குடித்து முடிப்பார்கள் என்று விவாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த போது ஆஸ்திரேலிய கால்பந்து அணியின் பயிற்சியாளர் சைமன் கார்டல் வீரர்களுக்கு மது விருந்து அளித்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த பிரதமர் டோனி அபோட்டை சந்தித்து தங்களுடன் மது விருந்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கொண்ட இவர் ஒரே மூச்சில் பீர் குடித்ததை வீடியோ எடுத்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி விட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து