முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ருதிஹாசன் மீதான தடை நீக்கம்

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

சென்னை, கால்ஷீட் குளறுபடி காரணமாக  நடிகை ஸ்ருதிஹாசன் படங்களில் நடிக்க நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் பேசியதை அடுத்து சுமூக தீர்வு ஏற்பட்டு ஸ்ருதிஹாசன் மீதான வழக்கை சம்பந்தப்பட்ட  தயாரிப்பாளர் வாபஸ் பெற்றார்.

நடிகர் கமலஹாசனின் மூத்த மகள்  ஸ்ருதிஹாசன். இவர் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானார்.  பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் நாகார்ஜுன், கார்த்தி ஆகியோர் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கொடுத்த தேதிக்கு நடிக்க வராததை அடுத்து  பிக்சர் ஹவுஸ் கார்ப்பரேஷன்  நிறுவனம் சார்பில் ஐதராபாத் நீதிமன்றத்தில் அவர் படங்களில் நடிக்க  தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி அவர் படங்களில் நடிக்க தடை விதித்ததுடன் அவரை யாரும் படத்தில் ஒப்பந்தம் செய்யக்கூடாது என தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய நடிகர் சங்கமும் அந்த நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் சுமூக தீர்வு ஏற்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் ஸ்ருதிஹாசன் மீதான வழக்கை நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றது. இருப்பினும் எதிர்காலத்தில் கதாநாயகிகள் கால்ஷீட் விஷயத்தில் குளறுபடி செய்ய கூடாது என அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து