முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17 முக்கிய ரயில் நிலையங்களில் எல்.ஈ.டி. சிக்னல்கள் அமைப்பு

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, 17 முக்கிய ரயில் நிலையங்களில் எல்.ஈ.டி. சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் அசோக் கே.அகர்வால் தெரிவித்தார்.சென்னையில் அண்மையில் நடைபெற்ற 60-ஆவது ரயில்வே வார விழாவில் அவர் மேலும் பேசியதாவது:

பயணிகளின் பாதுகாப்பு கருதி பல்வேறு முயற்சிகளை தெற்கு ரயில்வே எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரயில் எஞ்ஜின் ஓட்டுநர்களுக்கு தெளிவாகத் தெரியும் வகையில், 17 ரயில் நிலையங்களில் எல்.ஈ.டி. சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், 135 கிலோ மீட்டர் தூரத்துக்கான ரயில்வே தண்டவாளம் புணரமைக்கப்பட்டுள்ளது. பெண் பயணிகள் பாதுகாப்புக்காக 14 முக்கிய ரயில் நிலையங்களில் 1,300 ரயில்வே பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் முக்கியமாக சக்தி படை எனப்படும் பெண் காவலர் படை புறநகர் ரயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 782 ரயில் பெட்டிகளில் உயிரி கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் ஒட்டுமொத்த வருமானமும் 9 சதவீதம் உயர்ந்துள்ளது. விரைவு ரயில்களில் 96 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன, 9,562 பெட்டிகள் தாற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளன. 1,099 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவிலேயே அதிகம். முக்கியமாக நாட்டிலேயே தெற்கு ரயில்வேயில் மட்டும் 92 சதவீத விரைவு ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து