முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர்கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி: பல்கலைக்கழக மானியக்குழு பாராட்டு

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

தமிழகம் உயர்கல்வியில் சிறந்து விளங்குவதாக பல்கலைக்கழக மானியக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் "பல்கலைக்கழகங்கள், தொழில்நிறுவனங்கள், மற்றும் சமுதாயம் இடையே அறிவு பரிமாற்றம்" தொடர்பான 3 நாள் நாடு தழுவிய கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் நேற்று தொடங்கியது. உயர்கல்வித்துறையில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குவதாக பல்கலைக்கழக மானியக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில், சென்னையில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள், சமூகம் மூன்றும் ஒருங்கிணைந்து சிறந்த கல்வியாளர்களை உருவாக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் இக்கருத்தரங்கில், பங்களாதேஷ், பாகிஸ்தான், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அறிவியலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற , பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் . தேவராஜ், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 450 தன்னாட்சிக்கல்லூரிகள் உள்ளன. அதில் 150 தன்னாட்சி கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளது. கல்லூரிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்க பல்கலைக்கழக மானியக்குழு, புதிய நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்த அடிப்படையில் தமிழகத்தில் 20 கல்லூரிகள் தன்னாட்சி உரிமை வழங்க வலியுறுத்தி விண்ணப்பங்களை அளித்துள்ளன. தமிழகத்தில் கல்விபுரட்சியே நிகழ்ந்து வருகிறது. 1980 ஆம் ஆண்டில் கல்வித்துறையில் எம்.ஜி.ஆர் தனியார் துறைக்கு ஊக்கம் அளித்தார்.அதன் விளைவாக தமிழகத்தில் உயர்கல்வியில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. இப்போது இந்தியாவிலேயே உயர்கல்வித்துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வருவதாக பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்களில் கல்வி சீர்திருத்த புதிய நெறிமுறைகள் ஜுலை 15-ம் தேதிக்குள் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் . தேவராஜ் தெரிவித்தார். இக்கருத்தரங்கில் அனைத்து நாடுகள் சார்பிலும் ஒருங்கிணைந்து சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் புத்தகமாக வெளியிடப்பட்டது.இந்த கருத்தரங்கில் தேசிய ஆசிரியர் கல்வி கழகத்தின் (என்சிடிஇ) தலைவர் சந்தோஷ் பாண்டா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:-

ஆசிரியர் பயிற்சி கல்வி தொடர்பான புதிய ஒழுங்குமுறை விதிகளை வரும் ஜூலை முதல் நடைமுறைப்படுத்தும் பணியில் தேசிய ஆசிரியர் கல்விக்கழகம் ஈடுபட்டுள்ளது. இதன்படி புதிய ஒழுங்குமுறையின் படி, பி.எட், எம்எட். படிப்பு காலம் ஓராண்டில் இருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் இந்த புதிய ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்தும்போது பிரச்னைகள் எழலாம்.எனினும், ஆசிரியர் கல்வியில் மாற்றங்களை மேற்கொள்வது மிக மிக அவசியம். எனவே, ஆசிரியர் கல்வியில் நாடு முழுவதும் இந்த ஆண்டு புதியஒழுங்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும். இதில், ஆசிரியர் பயிற்சி படிப்பு காலம் அதிகரிப்பு, ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வியியல் படிப்புகள் அறிமுகம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறும்.இவ்வாறு பாண்டா பேசினார்.
முன்னதாக தமிழக உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா பேசியதாவது:

நாம் அனைவரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கல்வி நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள் இடையே சிறப்பான தொடர்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இன்றைய சூழலுக்கு ஏற்ப ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும்.
தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னணியில் திகழ்கிறது. இந்தியாவிலேயே உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். ஆசிரியர்கள் மாணவர்களின் விஞ்ஞான ஆர்வத்தை தூண்டுவதுடன் சிந்திக்கும் ஆற்றலையும் மேம்படுத்த வேண்டும். அதற்கான முழு சுதந்திரமும் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

இவ்வாறு அபூர்வா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து