முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏரியில் கூடுதலாக மணல் அள்ளியவருக்கு அபராதம் உயர் நீதிமன்றம் உத்தரவு

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு மணல் அள்ளிய உரிமம் பெற்றவரிடமிருந்து இழப்பீடு பெற்று சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு வழங்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகாவின் கணபதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எத்திராஜம்மாள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: எங்கள் ஊரில் இருந்த ஏரி சுற்றுப்புற கிரமங்களுக்கு நீர் ஆதாரமாக திகழ்ந்தது.

இந்த ஏரியை விரிவுபடுத்துவதற்காக கே.மணி என்பவருக்கு மணல் அள்ள உரிமம் வழங்கப்பட்டது. இவருக்கு 4 ஆயிரத்து 667 லாரி லோடு அளவு மணல் அள்ள உரிமம் வழங்கப்பட்டது.

ஆனால், அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளியுள்ளார். இதனால், எங்கள் கிராமத்தினஅ நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மணல் அள்ள உரிமம் பெற்ற மணியிடமிரு்நது எங்கள் கிராமத்துக்கு உரிய இழப்பீட்டை பெற்றத் தர அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர், உரிய அனுமதியுடன் மணி என்பவருக்கு மணல் அள்ள மூன்று மாதங்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்பட்டது.

இதற்காக அவர் உரிமை வரி, பாதுகாப்பு வைப்புத் தொகை ஆகியவை செலுத்தியுள்ளார். பொது மக்களிடமிருந்து புகார் வந்த பிறகு, ஏரி ஆய்வு செய்யப்பட்டது. அதில், வழங்கப்பட்ட அனுமதியை விட கூடுதலாக மணல் அள்ளியது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மணல் அள்ளியதற்கு உரிமத்தை ரத்து செய்ததும், வைப்புத் தொகையை திரும்ப தர மறுப்பது மட்டும் போதாது. கூடுதலாக மணல் அள்ளியதற்காக உரிய இழப்பீடை மணல் அள்ள உரிமம் பெற்றவரிடமிருந்து வசூலித்து கிராம மக்களுக்கு மாவட்ட வேலூர் மாட்ட ஆட்சியர் வழங்க வேண்டும்.

இது தவிர, ஏரி சீரமைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். கூடுதலாக மணல் அள்ளுவதற்கு உறு துணையாக இருந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை இரண்டு மாதங்களுக்குள் வேலூர் மாவட்ட ஆட்சியர் செய்து முடிக்க வேண்டும்.

இது தொடர்பான அறிக்கையை ஜூலை 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது கணபதிபுரம் ஏரியில் மணல் அள்ள உரிமை பெற்ற கே.மணி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து