முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ்

புது டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கட்சியின் மூத்த தலைவர்களான ஆனந்த் குமார், அஜித் ஜா ஆகியோரும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருந்து நீக்கப்பட்டனர்.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி, கட்சியின் நிறுவனர்களில் முக்கியமானவர்களான பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினர். அதிருப்தியாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி 2 தலைவர்களும் தேசிய செயற்குழுவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தே முற்றிலுமாக பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டனர். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் விவகாரம் கட்சிக்குள் சலசலப்பு ஏற்படுத்தி வந்த சூழலில், நாங்கள் கட்சியை விட்டு விலக மாட்டோம் என்றே இருவரும் கூறி வந்தனர். ஆனால், திடீரென்று இருவரது தலைமையில் கடந்த வாரம் அதிருப்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இது ஆம் ஆத்மி கட்சி தலைமையை பெரிதும் சலனப்படுத்தியதாகவும் அதன் எதிரொலியாக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து