முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்து முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

கெய்ரோ: எகிப்த்தில் போராட்டக்காரர்களை கொன்ற குற்றத்துக்காக அந்நாட்டு முன்னாள் அதிபர் மொர்சிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டில் முகமது மொர்சியின் ஆட்சி காலத்தின்போது அவருக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 2012-ல் தலைநகர் கெட்ரோவில் மாபெரும் முற்றுகை பேரணி நடத்தப்பட்ட போது, அதனை தடுக்க மொர்சிக்கு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதனை அவர்கள் ஏற்க தவறியதால், தனது ஆதரவாளர்களை விட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இதில் போலீஸார் உட்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

தொடர் போராட்டங்கள், சர்வதேச அழுத்தங்களை அடுத்து, அவரது பதவியை 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராணுவம் வலுக்கட்டாயமாக கைபற்றி, அவரது முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் அதிகாரத்தை செயலிழக்க செய்தது. போராட்டக்காரர்களை விட்டு படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மொர்சிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவர் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுகளில் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் முதல் வழக்கு இதுவாகும். இதில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

ஏற்கெனவே நடந்து வரும் வழக்குகளில் மொர்சி மற்றும் அவருக்கு ஆதரவான 14 சகோதரத்துவ கட்சியினர் தப்பித்தனர். அந்த வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் மொர்சி உள்ளிட்டோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து