முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டெல்லி அணியை வீழ்த்தி 3-வது வெற்றி பெற்றது கொல்கத்தா

செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 17-வது ஆட்டத்தில் டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.

 டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டோ்டெவில்ஸ்-கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீா் பீல்டிங்கை தோ்வு செய்தார் டெல்லி அணியின் துவக்க வீரா்களாக ஷ்ரேயாஸ் அய்யா்-அகா்வால் களமிறங்கினர் பிட்ச் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்ற, பயிற்சியாளா் வாசிம் அக்ரமின் ஆலோசனையை ஏற்று, பவுலிங்கை தோ்வு செய்த கம்பீரின் முடிவுக்கு உடனடி பலன் கிடைத்தது.

1 ரன் மட்டுமே எடுத்திருந்த அகா்வால், மார்னே மார்க்கல் வீசிய 2வது ஓவரில், உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் அடுத்து வந்த கேப்டன் டுமினி, நரேன் சுழலில் சிக்கி 5 ரன்னில் ஆட்டமிழந்தார் டுமினி ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற போது, பந்து அவா் எதிர்பார்த்ததை விட அதிகளவு எழும்பி வந்து, அவரை ஏமாற்றி விட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் டெல்லி 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

3வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யா்-திவாரி ஜோடி, அணியை ச ரிவில் இருந்து மீட்க போராடியது. இருவரும் கிடைத்த பந்துகளை பவுண்ட ரிக்கு விரட்டினர் ஆண்ட்ரே ரசலின் 8வது ஓவ ரில், ஒரு சிக்சரை பறக்க விட்டு அசத்தினார் அய்யர் ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பியூஷ் சாவ்லாவின் அடுத்த ஓவ ரில், 31 ரன்களுடன் அய்யா் (24 பந்து, 3 பவுண்ட ரி, 1 சிக்சா்) நடையை கட்டினார் அடுத்து திவா ரியுடன், யுவராஜ் சிங் இணைந்தார் இருவரும் 4வது விக்கெட்டுக்கு 37 ரன்கள் சோ்த்தனர் ஸ்கோர் 95 ரன்களாக உயா்ந்த போது, 32 ரன் (28 பந்து, 5 பவுண்ட ரி) எடுத்திருந்த திவா ரி, மோா்கல் பந்தில், யூசுப் பதானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதற்கு அடுத்த ஓவ ரிலேயே, பியூஷ் சாவ்லா பந்தில், விக்கெட் கீப்பா் உத்தப்பாவால், யுவராஜ் சிங் ஸ்டம்பிங் செய்யப்பட்டார் யுவராஜ் 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார் கடைசி கட்டத்தில் மேத்யூஸ் 28 ரன் (21 பந்து, 1 பவுண்ட ரி, 1 சிக்சா்) சோ்க்க டெல்லி 20 ஓவா் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன் என்ற கவுரமான ஸ்கோரை எட்டியது. கேதா் ஜாதவ் 12 ரன், கோல்டா் நைல் 2 ரன் எடுத்தனர் அமித் மிஸ்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

எளிய இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு 5வது ஓவ ரில், டெல்லி வேகப்பந்து வீச்சாளா் டொமினிக் ஜோசப் இரட்டை அடி கொடுத்தார் அந்த ஓவ ரின் முதல் பந்தில் 13 ரன்கள் எடுத்திருந்த உத்தப்பா, டுமினியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் 4வது பந்தில், தோ்டு மேன் திசையில் நின்ற, இம்ரான் தாகீ ரிடம் கேட்ச் கொடுத்து பாண்டே டக் அவுட்டாகி வெளியேறினார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், அதிரடியாக 26 ரன் (16 பந்து, 2 பவுண்ட ரி, 1 சிக்சா்) எடுத்து ஆட்டமிழந்தார் பின்னா் வந்த யூசுப் பதானும் அதிரடியில் இறங்க கொல்கத்தா வெற்றியை நோக்கி முன்னேறியது. இதனிடையே சிறப்பாக விளையாடிய கேப்டன் கம்பீா், 38 பந்துகளில் அரை சதம் கடந்தார் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இம்ரான் தாகீா் பந்தில் கம்பீா் ஆட்டமிழந்தார் அடுத்து வந்த டொஸ்சேத்தி, மிஸ்ரா பந்தில் 2 ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தார் கொல்கத்தா 18.1 ஓவா்களில், 4 விக் கெட் இழப்பிற்கு 147 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யூசுப்பதான் 40 ரன்களுடனும் (26 பந்து, 6 பவுண்ட ரி, 1 சிக்சா்), டொஸ்சேத்தி 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர் கொல்கத்தா அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகவும், டெல்லி அணிக்கு இது மூன்றாவது தோல்வியாகும் அமைந்தது. 4 ஓவா்களில், 18 ரன்களை மட்டும் வழங்கி, 2 விக் கெட்டுகளை கைப்பற்றிய உமேஷ்யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து