முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாம்கிர் செஸ் போட்டியில் ஆனந்த்- கிராம்னிக் ஆட்டம் டிரா

செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

ஷாம்கிர்: அஜர் பைஜான் நாட்டில் உள்ள ஷாம்கிர் நகரில் நடந்து வரும் செஸ் போட்டியில் ஆனந்த்-கிராம்னிக் ஆட்டம் டிராவில் முடிந்தது.

கிராண்ட் மாஸ்டர் உகார் காஷிமோவ் நினைவாக அஜர் பைஜானில் ஷாம்கிர் செஸ் 2015ம்ஆண்டு போட்டி நடக்கிறது.1லட்சம் யூரோ பரிசுத்தொகைக்கொண்ட இந்த  போட்டியில் உலகின் தலைச்சிறந்த 10 கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த தொடரின் 4ம் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஒரு ஆட்டத்தில் 5முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்தும் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கும் ஆடினார்கள். இந்த  ஆட்டம் டிராவில் முடிந்தது.இதனால் ஆனந்த் 2 புள்ளியுடன் 4வது இடத்தில் இருந்து வருகிறார்.

இந்த போட்டியில் ஆனந்த் இதுவரை ஆடிய 4ஆட்டங்களும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்துள்ளது.இதனால் அவர் 2புள்ளிகளுடன் இருக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் வெஸ்லி  சோ அபாரமாக ஆடி வெற்றி பெற்றார். அவர் அஜர் பைஜனானின் வீரர் ராவுப் மாமேடோவை வீழ்த்தினார். வெஸ்லி சோ இதுவரை ஆடிய 4ஆட்டங்களில் 3ல் வெற்றியும் ஒரு டிராவும் பெற்றுள்ளார். எனவே வெஸ்லி 3.5புள்ளிகளுடன் முன்னணியில் இருக்கிறார்.

இந்த போட்டியில் உலக நடப்பு சாம்பியன் கார்ல்சன்  2வது இடத்திலும் ரஷ்ய வீரர் கிராம்னிக் 3வது இடத்திலும் இருந்து வருகிறார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து