முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளம் சாலை விபத்தில் 17இந்திய பக்தர்கள் பலி

புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

நேபாளத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் 17 இந்திய பக்தர்கள் பலியானார்கள், நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அந்த பயணிகள் சென்ற பேருந்து சாலையில் இருந்து நீரோடையில் கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயம் அடைந்த 28பேர் காத்மாண்டுவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்த மெட்ரோ பாலிடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி நாராயன் சிங் கூறுகையில் பேருந்து உருண்டதில் சம்பவ இடத்திலேயே 14 பயணிகள் மரணம் அடைந்தனர்.

மேலும் 3பேர் காத்மாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது இறந்தார்கள் என்றார்.விபத்தில் யார் யார் இறந்தார்கள் என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது. டாடிங் மாவட்டத்தில் உள்ள நவுபிசே என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது அந்த பஸ் சாலையில் இருந்து உருண்டு அருகே உள்ளே நீரோடையில் கவிழ்ந்தது.

நேற்று காலை 6.45மணிக்கு விபத்து ஏற்பட்டது.காத்மாண்டுவில் உள்ள பசுபதி கோவிலுக்கு சென்று விட்டு வந்த போது இந்திய பக்தர்கள் சென்ற அந்த பஸ் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்தவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த விபத்து குறித்து காத்மாண்டுவில் உள்ள இந்திய துாதரகம் கூறுகையில் குஜராத்தைச்சேர்ந்த ஶ்ரீ ஹரி டூர்ஸ் அண்ட டிராவல்ஸ் நிறுவனத்திற்கு  சொந்த மான பேருந்து இந்த விபத்தில் சிக்கியுள்ளதுஎன தெரிவித்தது.

ஒரு மாத கால கட்டத்தில் நேபாளம் பசுபதி கோவிலுக்கு சென்ற இந்தியர்கள் பேருந்து விபத்து ஏற்படுவது இது 2வது முறையாகும். கடந்த மார்ச் மாதம் 23ம் தேதியன்று ஜார்கண்ட் மாநிலத்தைச்சேர்ந்தவர்கள்  சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5பேர் பலியானார்கள்,அவர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது அந்த விபத்து ஏற்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து