முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் எம்.எல்.ஏ.விடம் தவறாக நடக்க முயற்சி: வாலிபருக்கு தர்ம அடி

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

அல்கா லம்பா

புது டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி பெண் எம்எல்ஏவிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற வாலிபரை தொண்டர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 ஆம் ஆத்மியின் எம்எல்ஏவாக இருப்பவர் அல்கா லம்பா. டெல்லி அரசின் சுற்றுலாத்துறை சட்ட மன்ற செயலாளராகவும் உள்ளார். எனவே இதையொட்டி அவர் டெல்லியில் உள்ள புகழ் பெற்ற கவிஞர் மிர்சா காலிப் குடியிருந்த பாரம்பரிய இல்லத்தை பார்வையிட வந்திருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இது குறித்து அல்கா லம்பா கூறுகையில், வாலிபர் திடீரென என்னருகில் வந்தார். மிகவும் ஆபாசமான முறையில் என்னை நோட்டமிட்டார். எச்சரித்தும் செல்ல மறுத்தார்.

மேலும் டவுண்ஹால் அருகே மீண்டும் என்னை நெருங்கினார். இதனையடுத்து ஆத்திரம் அடைந்த நான் அவரை பளார் என்று அறைந்தேன். இதனையடுத்து அவர் ஓட்டம் பிடிக்க தொடங்கினார். இதனையடுத்து என்னுடன் இருந்த தொண்டர்கள் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அந்த பாலிபரை கோட்வாலி காவல் நிலையத்தில் போலீசாரிடம் ஒப்படைத்தனர் என்றார்.

மேலும் அந்த வாலிபர் மனநலம் சரியில்லாமல் இருப்பதாகவும், இதற்காக மருத்துவம் பெற்று வருவதாகவும் அல்கா லம்பா தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். சம்பவம் தொடர்பான புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பால்ஜித் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை பெற்றுக் கொண்டு இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள தாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து