முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் விண்ணப்பங்கள்: மே 11 முதல் விநியோகிக்கப்படும் - மே 6-ல் பி.இ. விண்ணப்பம்.

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 11–ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னையில் நேற்று மருத்துவ மாணவர் தேர்வுக்குழு செயலாளர் சுகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

2015 – 2016 கல்வியாண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் தொடர்பான மாணவர் சேர்க்கைக்கு வரும் 11 ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். இதற்கான அறிவிக்கை மே 10–ந்தேதி வெளியாகும்.தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். விண்ணப்பங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கிடைக்கும்விண்ணப்பம் மே 28–ந் தேதி மாலை 5 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 29–ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் எஸ்.டி. அருந்ததியினருக்கு இனத்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது மற்ற மாணவர்களுக்கு ரூ.500 கட்டணமாகும். சலுகை பெறும் மாணவர்கள் அதற்கான சான்று நகலை காண்பித்து விண்ணப்பத்தை பெற வேண்டும்.. செயலாளர், செலகஷன் கமிட்டி என்ற பெயருக்கு வரைவு காசோலை எடுத்து விண்ணப்பம் பெற வேண்டும்.மேலும் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர்களுக்கு 5 இணைப்பு விண்ணப்பங்கள் இன்றே இணைய தளத்தில் போடப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகள், முதல் தலைமுறையினர் கல்வி உதவி தொகை, வருவாய் சான்று, பூர்வீக இருப்பிடம், முன்னாள் படை வீரர்கள் போன்றவருக்கான இணைப்பு படிவங்களை முன்கூட்டியே பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்குவதற்கு வசதியாக www.tn.health.org, www.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வெளியிட்டு இருக்கிறோம். தேவையானவர்கள் இதனை இப்போதே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு வழக்கம் போல எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு கடும் போட்டி நிலவும். 200–க்கு 200 மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கையையொட்டி கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்படும். மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். ஜூன் 12–ந்தேதி உத்தேச ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அரசு பல்மருத்துவக்கல்லூரிகளிலும் மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் பொது பிரிவினர், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். மாணவர்களுக்கு வழங்குவதற்காக 48 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மே 6 ந்தேதி முதல் பி. விண்ணப்பம்.

தமிழகத்தில் வரும் மே 7 ந்தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதைத்தொடர்ந்து வரும் மே 11 ந்தேதி முதல் எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த பி,டி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 2015-16 கல்வியாண்டுக்கான பி.., மற்றும் பி.டெக் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான விண்ணப்பங்கள் மே மாதம் 6 ந்தேதி முதல் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கை வரும் 4 ந்தேதி வெளியிடப்படும் என்றும் விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி நாள் மே 27 ந்தேதி என்றும் அவற்றை பூர்த்தி செய்து வரும் மே மாதம் 29 ந்தேதிக்குள் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம் கடந்த ஆண்டை போல ரூ 500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் ரூ 250 செலுத்தினால் போதுமானது என்றும் அண்ணா பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து