முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மும்பையை வீழ்த்தி டெல்லி வெற்றி

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சொந்த மண்ணில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த டெல்லி அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்து சொந்த மண்ணில் வெற்றி பெற்றுள்ளது.

கேப்டன் ஜேபி டுமினி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அரை சதத்தால் பேட்டிங்கில் நிமிர்ந்த டெல்லி அணிக்கு பவுலிங்கில் இம்ரான் தாஹிர் சிறப்பு தேடித் தந்து டெல்லி அணியின் வெற்றிக்கு உதவினர். தொடர்ந்து சொந்த ஊரான டெல்லியில் 9 தோல்விகளைச் சந்தித்து பெரும் சிரமத்தில் இருந்த டெல்லிக்கு இந்த வெற்றி கிடைத்தது அதன் ரசிகர்களுக்கு களிப்பூட்டியுள்ளது. இந்த போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி, மும்பையை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 190 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எட்டி அசத்தியது. அதன் பின்னர் பந்து வீச்சில் அந்த அணி மிரட்டியதால் மும்பை இந்தியன்ஸால் எதுவும் செய்ய முடியாமல் போனது.

இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி 22 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தது அந்த அணிக்கு பெரும் பலமாக அமைந்தது. டெல்லியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை சுருண்டது. மும்பை அணி தனது சேஸிங்கின்போது 9 விக்கெட்களை இழந்து 153 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் அதிரடி வீரர்களால் கூட வெற்றியைப் பெற முடியாமல் போனது.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் லென்டில் சிம்மன்ஸ் அதிரடியாகத்தான் ஆட ஆரம்பித்தார். ஆனால், அவரை அபாரமான முறையில் கேட்ச் செய்து வெளியேறினார் டுமினி. அதேபோல சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த பார்த்திவ் படேலை மிகச் சிறப்பான முறையில் கேட்ச் செய்து வெளியேற்றினார் இம்ரான் தாஹிர்.

டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமீத் மிஸ்ரா சிறப்பாக பவுல் செய்து 2 விக்கெட்களைச் சாய்த்தார். இவரது பந்து வீச்சில் போலார்ட் மற்றும் உன்முக்த் சந்த் ஆகியோர் வீழ்ந்தனர். மறு முனையில் ரோஹித் சர்மாவும், அம்பட்டி ராயுடுவும் (தலா 30 ரன்கள்) போராடிப் பார்த்தனர். ஆனால் கோல்டர் நைல் வீழ்த்தினார்.

முன்னதாக டெல்லி அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேப்டன் டுமினி ஆகியோர் சிறப்பாக ஆடி ஆளுக்கு ஒரு அரை சதம் போட்டனர். ஐயர் அபாரமாக ஆடி 83 ரன்களைக் குவித்தார். டுமினி ஆட்டமிழக்காமல் 78 ரன்களைக் குவித்தார். இதுதான் இந்த சீசனில் இவர்களுக்கு அதிகபட்ச ரன்களாகும்.

யுவராஜ் சிங் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை. அவர் மீதான எதிர்பார்ப்பும் இப்போது முன்பு போல இல்லை என்பதால் பெரிய பாதிப்பை யுவராஜின் பேட்டிங் ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை எடுத்தது. இதை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு  153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தன் சொந்த மன்னில் மும்பையை வீழ்த்தியது டெல்லி. சேராஸ் அய்யர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து