முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேதார்நாத்தில் ஏன் நடந்தே சென்றேன்: ராகுல் காந்தி விளக்கம்

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

கேதார்நாத், காங்கிரஸ் கட்சித் துணை தலைவர் ராகுல் காந்தி கேதார்நாத் புனித பயணம் மேற்கொண்டார். கிட்டத்தட்ட 16 கி.மீ தூரம் அவர் விருப்பத்துடன் நடந்தே சென்றார். ஹெலிகாப்டரில் சென்றால் அது 2013ம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துவது போலாகி விடும் என்பதால் ஹெலிகாப்டரில் தான் செல்லவில்லை என்று ராகுல் காந்தி விளக்கம் அளித்தார்.
2013-ல் மந்தாகினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்தனர். அப்போது நான் இங்கு வந்திருந்தேன். இயற்கைச் சீற்றத்தின் தாக்கத்தை நேரில் கண்டேன். அதனால் இப்போது கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டரில் வந்தால் அது இங்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களை அவமதிப்பதாக இருக்கும் என நினைத்தேன். எனவே, 16 கி.மீ. தூரத்துக்கு நடந்து வந்தேன் என்றார். 

மேலும் அவர்  கூறுகையில், கேதார்நாத் ஒரு சுற்றுலா தலமும்கூட. இங்கு நிறைய பேர் வேலை செய்கின்றனர். மலை ஏறுபவர்களின் உடமைகளை தூக்கிச் சுமக்கும் சுமைகூலிகள் இருக்கின்றனர். இங்கு அன்றாடம் நிறைய பேர் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால், அவர்கள் அனைவரது மனதிலும் 2013 வெள்ளப் பெருக்கு இன்னமும் பயத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, நடைப் பயணமாக நான் கேதார்நாத் வருவதன் மூலம் மக்களுக்கு கேதார்நாத் தற்போது பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உணர்த்த முடிவு செய்தேன். அதனால் தான் நடைப்பயணம் மேற்கொண்டேன் என்றும் அவர் தெரிவித்தார். 

கோயிலில் நீங்கள் என்ன வேண்டிக் கொண்டீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது, பொதுவாக நான் கோயிலுக்குச் செல்லும் போது எனக்காக நான் எதுவும் வேண்டிக் கொள்வதில்லை. அது என் இயல்பு. ஆனால், கேதார்நாத் கோயிலுக்குள் நுழைந்தபோது ஏதோ புதிய உத்வேகம் தீயாக என் தேகத்தில் பரவியது போல் உணர்ந்ததாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து