முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஆண்டுகளுக்குள் கிராமங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துவேன்: பிரதமர் மோடி சபதம்

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - இன்னும் 5 ஆண்டுகளுக்குள் கிராமங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துவேன். நிச்சயம் ஒரு மாற்றத்தை கொண்டு வருவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். டெல்லியில் பஞ்சாயத்து ராஜ் தினம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
இன்னும் 5 ஆண்டுகளுக்குள் கிராமங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துவேன். பட்ஜெட்டும், நல்ல தலைமையும் இந்த லட்சியத்தை நிறைவேற்ற உதவும். கடந்த 60 ஆண்டுகளில் கிராமங்களுக்கு சென்ற பணத்தை எல்லாம் நாம் கூட்டி பார்த்தால் ஏன் கிராமங்கள் இன்னும் முன்னேறவில்லை என்று உங்களுக்கே வியப்பாக இருக்கும்.

எனவே வரும் 5 ஆண்டுகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்றார் தேசப் பிதா அண்ணல் மகாத்மா காந்தி. அவற்றை நாம் சிந்தித்து பார்த்து முன்னேற்றத்திற்கு வழி காண வேண்டும். நமது நாட்டில் உள்ள சில மாநிலங்களில் பஞ்சாயத்துக்கள் தங்களது 5 ஆண்டு திட்டங்களை உருவாக்குகின்றன.

பணியும் ஒரு உறுதியான பாதையில் செல்கிறது. எனவே வரும் 5 ஆண்டுகளில் பணிகள் செவ்வனே நடந்தால் முடிவுகளும் நன்றாகவே இருக்கும். கிராமங்களை பற்றியும் அடுத்த தலைமுறையை பற்றியும் நீங்கள் கவலைப்பட்டாலே போதும். பட்ஜெட்டில் இருந்து செலவழிக்க கூட வேண்டாம். கிராமங்களை பற்றி சிந்தித்தாலே போதும். அந்த வகையில் அரசு அதிகாரிகள் கிராமங்களில் பணியாற்ற வேண்டும். கிராம மக்களுக்கு கல்வி பயிலப்பட வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி போதிக்க சிறிது நேரத்தை ஒதுக்குங்கள் என்று கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியரை நீங்கள் கேட்டுக் கொண்டால் அவர் எப்போதுமே தயாராகவே இருப்பார்.

அது அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்றாகவே இருக்கும். எனவே ஒரு கிராமத்தால் 5 குடும்பங்களை வறுமையில் இருந்து அகற்ற முடியும் என்றால் பிறகு நீங்களே யோசித்து பாருங்கள். நமது லட்சியத்தை அடைந்து விடலாம். கிராமங்களை பற்றி சிந்திக்காமல் அவைகளுக்கு மதிப்பு தராமல் இருக்கும் வரை நம்மால் கிராமங்களை முன்னேற்ற முடியாது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து