முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஞ்ச ஊழல் ஆணை குழுவில் ராஜபக்சே வாக்குமூலம் அளிக்க மறுப்பு

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      இலங்கை
Image Unavailable

கொழும்பு - இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற சிறீசேனா புதிய அதிபரானதும் பதவியில் இருந்த போது அதிகார துஷ்பிரயோகம் செய்த ராஜபக்சே மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு எதிர்க்கட்சி தலைவர் திஸ்ச அந்தநாயக்கவிற்கு ராஜபக்சே மந்திரி பதவி வழங்கினார். எனவே அவர் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.


அதை தொடர்ந்து அவர் லஞ்ச ஊழல் ஆணைய குழுவில் ஆஜராகி நேற்று வாக்குமூலம் அளிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது. அதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். இரவு முழுவதும் பாராளுமன்றத்தில் முற்றுகையிட்டு 100 எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். ராஜபக்சே மீதான அந்த உத்தரவை வாபஸ் பெர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அதையடுத்து நேரில் சென்று ராஜபக்சேவிடம் வாக்குமூலம் பெற லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு சம்மதித்தது. இந்த நிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்பு நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளிக்க முடியாது என ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து லஞ்ச ஊழல் மோசடி தடுப்பு ஆணைக்குழு தலைவர் ஜகத் பாலபட்ட பெந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அதிபர் வரைமுறையில் எனக்கு கிடைத்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே தான் திஸ்ச அந்தநாயக்கவிற்கு மந்திரி பதவி வழங்கினேன். என்ன காரணத்திற்காக என்னிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது என்பது பற்றிய விவரங்களை லஞ்ச ஊழல் மோசடி தடுப்பு ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.

எது குறித்து விளக்கம் தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது. யார் என் மீது புகார் செய்தார்கள். எப்படிப்பட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. விசாரணை நடத்தப்படும் முறை குறித்தும் அறிந்து கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து