முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசாரிடம் விசாரணை நடத்தாதது ஏன் ? ஆந்திர ஐகோர்ட் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் - திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரைக்கும் யாரையும் கைது செய்யாதது ஏன்? என்றும், போலீசாரிடம் விசாரணை நடத்தாதது ஏன் என்றும்  ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் விசாரணை தொடர்பான ஆவணங்களை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி அருகே ஷேசாசலம் வனப்பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

செம்மரம் வெட்டி கடத்தியதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஆந்திரா போலீசாரும் வனத்துறையினரும் தெரிவித்தனர். இந்த நிலையில் இது ஒரு போலி என்கவுண்டர் என்று ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று ஐதராபாத் ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது சம்பவம் நடந்து 17 நாட்களை கடந்தும் இதுவரை ஏன் யாரையும் கைது செய்யவில்லை என்று ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளதாகவும் இதில் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இது தொடர்பாக எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று தொடர்ந்து கேள்வி எழுப்ப பதில் அளிக்க திணறினார் அரசு வழக்கறிஞர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறியும், இதுவரை ஏன் சமர்ப்பிக்கவில்லை என்றும், வருகின்ற 28 ஆம் தேதிக்குள் விசாரணை தொடர்பான ஆவணங்களை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும் நீதிபதிகள் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து