முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனி வங்கி துவங்க வேண்டும் : மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - விவசாயிகள் கடனை ரத்து செய்து அவர்களுக்கு தனி வங்கி துவங்க வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் வலியுறுத்தின. நாட்டில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் வறட்சி நிலவுகிறது.ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து வருகிறார்கள். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நடத்திய பேரணியில் ராஜஸ்தானைச்சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை செய்தார். விவசாயம் பொய்த்து போனதால் அவர் அந்த முடிவை எடுத்தார். 

தலைநகரில் அவர் தற்கொலை செய்த துயர நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாநிலங்களவையில் எதிர் கட்சியினர் விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் எ ன வலியுறுத்தினார்கள்.மேலும் பயிர் காப்பீடு என்பது மத்திய,மாநில அரசுகளின் பொறுப்பாகும். மகளிருக்கு தனி வங்கி உருவாக்கப்பட்டதைப்போல விவசாயிகளுக்கு என பிரத்யேக வங்கியை துவக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியயைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் பேசுகையில், பாஜகவும் காங்கிரசும் கைகோர்த்து எம்,எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை செயல்படுத்தவேண்டும். துயரத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்த பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்றார். தலைநகரில் ராஜஸ்தான் விவசாயி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்தும் விவசாயிகள் பிரச்சினை குறித்தும் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர்நரேஷ் அகர்வால் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் மோசமான வானிலை காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த அரசு பரந்த மனப்பான்மையுடன் உதவிகள் செய்ய வேண்டும் என்றார். பயிர் காப்பீடு என்பது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பாகும்.

பயிர்கள் எந்த நிலையில் இருந்தாலும் இந்திய உணவுக்கழகம்(எப்.சி.ஐ) அதனைகொள் முதல் செய்ய வேண்டும்.விவசாயிகளின் நிலையை மனதில் கொண்டு பயிர் கடனை அரசு ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு என பிரத்யேகமான கிசான் வங்கியை அரசு துவக்கி1-2 சதவீத குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து