முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டஸ் மலையில் மீட்கப்பட்ட மல்லி மஸ்தான் பாபுவின் உடல் சென்னை வந்தது

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

சென்னை, அர்ஜெண்டினாவின் ஆண்டஸ் மலையில், மலை ஏறும்போது வீர மரணத்தை தழுவிய இந்திய மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை 172 நாட்களில் ஏறியவர் என்ற சாதனையைப் படைத்த மஸ்தான் பாபு, கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி அர்ஜெண்டினா மற்றும் சிலி எல்லையில் அமைந்துள்ள ஆண்டஸ் மலைத்தொடரில் மலை ஏறுவதற்காக சென்றார். ஆனால் அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் 11 நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் கிடந்த இடம் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பாபுவின் அக்கா மல்லி டோரசன்னம்மா அர்ஜெண்டினா சென்று பாபுவின் பிரேதத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி அவரது உடல், பனி படர்ந்த மலையில் இருந்து பாதுகாப்பாக கீழிறக்கப்பட்டு வடக்கு அர்ஜெண்டினாவின் துக்குமன் நகரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் செயற்கை ஊசி மூலமாக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது உடல் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

இங்கிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பாபுவின் சொந்த கிராமமான காந்தி ஜன சங்கத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து