முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சி தேர்தல் : பா.ஜ.கவுக்கு பின்னடைவு

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

மும்பை - மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த புதன் கிழமையன்று உள்ளாட்சித்தேர்தல்  நடந்தது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக் கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த உள்ளாட்சித்தேர்தலில் நவி மும்பை மற்றும் அவுரங்காபாத் ஆகிய மாநகராட்சிகளின் முடிவை மகாராஷ்டிர மாநில மக்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.

நவி மும்பை நகராட்சியில் உள்ள 111 இடங்களில் 37இடங்களை சிவசேனா கட்சி கைப்பற்றியது. இதில் பாஜவுக்கு வெறும் 6இடங்கள் மட்டுமே கிடைத்தது.அதேப்போன்று அவுரங்காபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 23 இடங்களில் ஜெயித்தது. சிவசேனா 28 இடங்களை பெற்றது.இதர உள்ளாட்சிப்பகுதிகளிலும் பாரதிய ஜனதாவிற்கு பெரும்  வெற்றி கிடைக்கவில்லை. உள்ளாட்சித்தேர்தலில்  அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

அவுரங்காபாத்தில் முஸ்லீம் கட்சியான எம்.ஐ.எம் 26 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. மகாராஷ்டிரா உள்ளாட்சித்தேர்தலில் முஸ்லீம் கட்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றியாக இது இருக்கிறது.எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளுக்கு மிக குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous April 25, 13:41

    கண்டிப்பாக ஹிந்துக்கள் சிந்திக்க வோண்டிய விஷயம்

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து