முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை குஷ்புவுக்கு பதவி கொடுத்ததற்கு எதிர்ப்பு: காங். பிரமுகர் ராஜினாமா

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை: நடிகை குஷ்புவுக்கு பதவி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின்  எஸ்.டி. பிரிவு  நிர்வாகி வக்கீல் ஏ. மோகன்தாஸ் விலகினார்.

இதுதொடர்பாக , அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

எனது தாயார் மதுரை பாண்டியம்மாள், அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக பணியாற்றியவர்.அவர் உயிர் உள்ளவரை அந்த கட்சிக்காக பாடுபட்டார்.அவரது மகனான நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தீவிரமாக கட்சி பணியாற்றினேன்.  காங்கிரஸ் கட்சிக்காக பல வழக்குகள் தொடர்ந்தேன்.

காட்டுநாயக்கன் சமுதாயத்தை சேர்ந்த என்னை, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.டி. பிரிவு தலைவராக நியமிக்கவேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் எஸ்.டி. பிரிவு தலைவர் அஜித்ஜோகி முடிவு செய்து,   பதவி வழங்கிங்கினார் .   இந்த நியமன உத்தரவுக்கு ஒப்புதல் கேட்டு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அஜித் ஜோகி பரிந்துரை கடிதம் அனுப்பினார்.

ஆனால், அந்த பரிந்துரையை இதுவரை  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஏற்று, நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதேநேரம், எஸ்.டி. மக்களின் முன்னேற்றத்துக்காக நான் பாடுபடுவேன் என்று அவ்வப்போது ராகுல்காந்தி பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கிறார். ஆனால், எஸ்.டி. பிரிவு தலைவர் பதவிக்கு நியமித்து பிறப்பித்த உத்தரவுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்காமல் உள்ளது.
ஆனால், தி.மு.க.வில் இருந்து வந்த நடிகை குஷ்புவுக்கு,  சில நாட்களிலேயே செய்தித் தொடர்பாளர் பதவியை  வழங்கி உள்ளீர்கள். கட்சிக்காக தீவிரமாக உழைத்த என்னை போன்றவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை. ஆகவே மன வேதனையுடன், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுகிறேன். அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில்  கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து