முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி, ஆந்திரா உட்பட 7 மாநிலங்களுக்கு அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்: ஏராளமானோர் மனு

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை: ஜெயலலிதா ஆணைப்படி புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் உட்பட 7 மாநிலங்களுக்கு அண்ணா தி.மு.க. அமைப்புத் தேர்தல்கள் நேற்றுதுவங்கியது. ஒவ்வொரு இடத்திலும் ஏராளமானபேர் ஆர்வத்துடன் வேட்புமனுக்களை கொடுத்தார்கள்.

அண்ணா தி.மு.க. அமைப்புத் தேர்தல்கள்  ஒவ்வொரு கட்டமாக நடந்து வருகிறது. இதுவரை 12 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. 13-வது கட்டமாக, கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகியவற்றிற்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டக் கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு நேற்றும்,இன்றும்,  நடக்கிறது. அதனைத் தொடர்ந்து 14-வது கட்டமாக, பிற மாநிலக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி, பகுதி, நகரக் கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு 29.4.2015, 30.4.2015 ஆகிய தேதிகளி லும் நடைபெற உள்ளது. தேர்தல்களை நடத்திட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்களை  ஜெயலலிதா நியமித்துள்ளார்.

தேர்தல் பொறுப்பாளர்கள்
1)    புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் ஆர். காமராஜ்  (திருவாரூர் மாவட்ட செயலாளர்)
2)    கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் பி.வி. ரமணா (திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர்)
3)    ஆந்திர மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் வி. செந்தில்பாலாஜி (கரூர் மாவட்ட செயலாளர்)
4)   மகாராஷ்டிர மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் (ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)
5)    கேரள மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி (கோவை புறநகர் மாவட்ட செயலாளர்)
6)    புதுடெல்லி மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் பி. தங்கமணி (நாமக்கல் மாவட்ட செயலாளர்)
7)    அந்தமான் மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்  (புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்) ஆகியோரை அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நியமித்திருந்தார். இது தவிர தேர்தல் ஆணையாளர்களையும்  ஜெயலலிதா நியமித்திருந்தார்.

அந்தந்த மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளரும், தேர்தல் ஆணையாளர்களும் வேட்பு மனுக்களை பெற்றார்கள்.ஒவ்வொரு  இடத்திலும் தொண்டர்கள் ஆர்வத்துடன் மனு கொடுத்தார்கள். . ஒவ்வொரு  இடத்திலும் தொண்டர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.

அந்தமான்

அந்தமான்  மாநிலத்தில் மனுக்களை தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் டாக்டர்  சி.விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். உடன் தேர்தல் ஆணையாளர்கள், சட்டமன்ற  உறுப்பினர்கள் பி.கே.வைரமுத்து, மு.ராஜநாயகம், வி.ஆர்.கார்த்திக்  தொண்டைமான், முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.இங்கு ஆர்வத்துடன் ஏராளமானபேர் மனு கொடுத்தனர்.

கர்நாடகம்

கர்நாடக மாநில அண்ணா தி.மு.க. அமைப்பு தேர்தல் நேற்று பெங்களூர் தமிழ் சங்க அரங்கில் துவங்கியது. இங்கு   பொறுப்பாளராக தமிழக அமைச்சரும் திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளருமான  பி.வி.ரமணா மற்றும் ஆணையாளர்கள் திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை  செயலாளர் இரா. மணிமாறன், திருவள்ளுர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற  செயலாளர் டி. மகேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர்  டி. முல்லைவேந்தன், திருவள்ளுர் மேற்கு மாவட்ட வாழக்கறிஞர் பிரிவு செயலாளர்  பி. என். உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கழக அமைப்பிற்கான  பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமான கழக தொண்டர்கள்  தேர்தல் பொறுப்பாளர்களிடம் இருந்து அதற்கான தொகையினை செலுத்தி  விண்ணப்பங்களை ஆர்வமுடன் பெற்று சென்றனர்.
இதில் மாநில கழக செயலாளர்  வா. புகழேந்தி, அவைத்தலைவர் கே. முனுசாமி, பொருளாளர் ராஜேந்திரன், இணை  செயலாளர்கள் ஜி.ராஜி, ஏ. மனோகர், எம். மஞ்சுளா, மாவட்ட கழக செயலாளர்  குமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஐ.டி.ஐ. சுப்பிரமணி, இளைஞர் அணி செயலாளர்  அன்புவேல், பொதுகுழு உறுப்பினர்கள் ரவிகுமார், காசிராஜன், ஆர். ரவி, தொகுதி  செயலாளர்கள் பெருமாள், தேவதாஸ், ஐ. ராமசந்திரன், ஏ. எம். சந்தர், சிம்சன்  ஷ்ண்முகம், மகளிர் அணி செயலாளர் தனம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் தேர்தல் பொறுப்பாளராக திருவாரூர் மாவட்ட  செயலாளரும், தமிழக உணவு அமைச்சருமான ஆர். காமராஜை அண்ணா தி.மு.க. பொதுச்  செயலாளர் ஜெயலலிதா நியமனம் செய்தார். திருவாரூர் மாவட்ட தேர்தல்  ஆணையாளர்களாக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எல்.எம். முகமது அஷ்ரப்,    ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன். வாசுகி ராம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி  செயலாளர் சிபிசி அன்பழகன்,  மாணவர் அணி செயலாளர் ஜே. விஜயராகவன் ஆகியோர்  நியமிக்கப்பட்டனர்.
நேற்று காலை உப்பளத்திலுள்ள அண்ணா தி.மு.க.  தலைமைக்கழகத்திற்கு வந்தனர்.  புதுச்சேரி நகரிலுள்ள 122 வார்டுகளுக்கும்,  கொம்யூன் பஞ்சாயத்துகளிலுள்ள   98 வார்டுகளுக்கான செயலாளர் பதவிக்கு  போட்டியிடுகின்றவர்கள் விண்ணப்ப படிவங்களை  வாங்கிச் சென்றனர். தேர்தல் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றவர்கள் ,இன்று மாலைக்குள் தேர்தல் பொறுப்பாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து