முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலநடுக்க பீதி வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து பீதி அடைய வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி இருந்தது.

இதனால் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. டெல்லியில், இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவானது. நிலநடுக்கம் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,  நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே நிலநடுக்கம் உணரப்பட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி உடனடியாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நேபாள ஜனாதிபதி ராம்பிரதான் யாதவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வெளிநாடு சென்றுள்ள நேபாள பிரதமரை தொடர்பு கொள்ள பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து