முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கொள்கை ரீதியில் நடவடிக்கை: பிரகாஷ் ஜவடேகர்

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க விரைவில் கொள்கை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

உலக ஆய்வக விலங்குகள் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விலங்குகள் நலன் சார்ந்த இணையதள சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

மக்களின் மதம், கலாச்சாரம் சார்ந்த ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இது போன்ற போட்டிகளுக்கு தடை விதிப்பதால் பாரம்பரிய கலாச்சார மாண்பு சீர்குலையும் அபாயம் ஏற்படும். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க விரைவில் கொள்கை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற விழாக்களில் விலங்குளின் நலன்களுக்கு எதிரான செயல்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous April 26, 08:39

    dei நீங்க கில்ல்றதும் கிள்ளிவிட்டு, இப்ப தாலாட்டு பாட வறிங்க......இதெல்லாம் ஒரு பொழப்பு.....தூ......

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து