முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட இந்திய நகரங்களில் கடும் நிலநடுக்கம்: 7.7 ரிக்டராக பதிவு, செல்போன் சேவைகளும் பாதிப்பு

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ உட்பட வட இந்திய நகரங்களில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்தனர்.

டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் நேற்று 11.44 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதேபோல் தமிழகம், புதுவை, கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் லேசாக உணரப்பட்டது.

இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி சுட்டெரிக்கும் வெயிலில் சாலைகளில் குவிந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகள் பதிவாகி இருந்தது. நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம் தமிழகம் வரை அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியில் சிறிது நேரம் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு மீண்டும் இயங்கின. பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் செல்போன் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

செல்போன் சேவை பாதிக்கப்பட்டதால் நிலநடுக்கம் குறித்து உறவினர்கள் பலரும் தொலைபேசி வாயிலாக மற்ற உறவினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. டெல்லியில் 45 வினாடி இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். டெல்லியில் நிலநடுககம் காராணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

டெல்லியில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக நிலநடுக்கம் பதிவானது. இரண்டாவது முறையாக 1.30 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவானது.

இந்நிலையில், நிலநடுக்கம் தொடர்பான தகவல் பெற டெல்லியில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தகவல்களைப் பெற 011- 2301 2113, 2301 4104, 2301 7905 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து