முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகள்: ஐ.நா.

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      உலகம்

ஐ.நா. இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை மகிழ்ச்சியான நாடுகளாக உள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2015ம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 158 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2வது இடத்தில் ஐஸ்லாந்தும், 3வது இடத்தில் டென்மார்க்கும், 4 மற்றும் 5வது இடத்தில் நார்வே, கனடா நாடுகளும் உள்ளன.

இந்தப் பட்டியலில் இந்தியா 117வது இடத்தில் இருக்கின்றது. கடந்த 2013-ல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியா 111வது இடத்தில் இருந்தது. பாகிஸ்தான் 81வது இடத்திலும், வங்கதேசம் 109வது இடத்திலும் உள்ளது.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் (ஜி.டி.பி.), பிரச்சினைகள் உருவாகும் போது ஏற்படும் சமூக ஆதரவு, வாழ்க்கைத் தேவைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் நிலவும் சுதந்திரம், சராசரி வயது வரம்பு, ஊழல் மீதான பார்வை ஆகியனவற்றை கருத்தில் கொண்டு இந்த மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து