முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகள் சோதனை: கோர்ட் உத்தரவு

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு, இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்ரிபால சிறீசேனா வெற்றி பெற்று அதிபரானார். அதை தொடர்ந்து ராஜபக்சே ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள், அதிகார அத்துமீறல்கள் வெளியாகி வருகின்றன.

ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே ரூ.3 கோடியே 29 லட்சம் நிதி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். இவர் ராஜபக்சேவின் ஆலோசகராகவும், பொருளாதார அபிவிருத்தி துறை மந்திரியாகவும் இருந்தார். மற்றொரு தம்பி கோத்தபய ராஜபக்சேவும் ஊழல் தடுப்பு கமிஷன் விசாரணையின் கீழ் உள்ளார். இவர் ராஜபக்சே அரசில் அதிகாரம் மிக்க ராணுவ மந்திரியாக இருந்தார். ராஜபக்சே மீதும் ஊழல் தடுப்பு கமிஷன் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது. ஆனால் கமிஷன் முன்பு தான் ஆஜராக முடியாது என்று மறுத்து விட்டார்.

கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பசில் ராஜபக்சேவை பார்க்க வந்த மகிந்த ராஜபக்சே சிறீசேனா அரசு மீது குற்றம் சாட்டினார். தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் வழக்குகளில் சிக்க வைத்து விடுவார்கள் என்று அச்சம் தெரிவித்தார். இந்த நிலையில் அவரது மனைவி  ஷிரந்தியின் வங்கி கணக்குகளும் சோதனையிடப்பட உள்ளன. சிரிலிய சவிய வங்கியில் ஷிரந்தி பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டன. அந்த கணக்குகளில் பணம் போடப்பட்டு காசோலைகளை பயன்படுத்தி பல்வேறு வங்கி கிளைகளில் பணமாக்கி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. அதற்கான விசாரணைகளை தொடங்க அனுமதி வழங்குமாறு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை ஏற்றுக் கொண்ட கோர்ட் வங்கி கணக்குகளை சோதனை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து