முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயி தற்கொலை: கெஜ்ரிவால் மீது 10 வழக்குகள்

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  விவசாயி தற்கொலை தொடர்பாக கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது 10 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் நிலம் கையக மசோதாவை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது ராஜஸ்தானை சேர்ந்த கஜேந்திரசிங் என்ற விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கெஜ்ரிவால் மீதும் ஆம் ஆத்மி கட்சியினர் மீதும் டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். கஜேந்திரசிங் தற்கொலைக்கு முயன்ற போது அனைவரும் கைதட்டி ஊக்கப்படுத்தியதாகவும், கஜேந்திரசிங் தற்கொலை நாடகமாடியதாகவும்,  யாருமே காப்பாற்ற முன்வராததால் மரணம் ஏற்பட்டு விட்டது என்றும் மேடையில் இருந்தவர்களும் இந்த காட்சியை பார்த்து ரசித்தார்கள் என்றும் எனவே கூட்டத்தை ஏற்பாடு செய்த ஆம் ஆத்மி கட்சியினரே விவசாயி மரணத்துக்கு காரணம் என்று டெல்லி போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீசாரின் குற்றச்சாட்டுக்கு கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய கோரி இதுவரை டெல்லி போலீசுக்கு 10 புகார்கள் வந்துள்ளன. டெல்லி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அமீத் மாலிக் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு புகார் கொடுத்துள்ளார். இந்த புகார்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து