முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு பெயர் மாற்றக் கோரி வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: இந்தியாவின் பெயரை மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நிரஞ்சன் பத்வால் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தியாவின் பெயரை பாரதா என மாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு நாட்டின் பெயர் மீது தெளிவான புரிதல் ஏற்பட வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப் பிரிவு 1-ல், பாரத் என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரையின்படி பாரதா என்றே அழைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அஜய் ஜி. மஜிதா, ராகுல் பாண்டே ஆகியோர், இந்தியா என்ற பெயர் காலனி ஆதிக்கத்தின்போதுதான் உருவானது. பழமையான கல்வெட்டுகளிலும், வரலாற்றுச் சாட்சியங்களின்படியும் பாரதா என்ற பெயரே நம் தேசத்துக்கு விளங்கியுள்ளது. அரசியல் சாசன சட்டப்பிரிவிலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் பெயரை பாரதா என மாற்ற வேண்டும் என வாதிட்டனர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளும் யூனியன் பிரேதேசங்களும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து