முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மனித உரிமை பெண் ஆர்வலர் சுட்டுக் கொலை

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      உலகம்

கராச்சி, பாகிஸ்தானில் மனித உரிமைகள் ஆர்வலரை மர்ம ஆசாமிகள் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கி சூட்டில் அவரது தாயார் படுகாயம் அடைந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் சபீன் முகமூத், பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் மோதில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சபீன் குற்றம்சாட்டி வந்தார். இது தொடர்பாக, கராச்சியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள கராச்சி வந்தார். அங்குள்ள ஓட்டலில் சபீனும், அவரது தாயாரும் தங்கியிருந்தனர். இருவரும் ஓட்டலில் இருந்து காரில் வெளியே சென்றனர். அப்போது பைக்கில் வந்த ஆசாமிகள் காரை வழிமறித்தனர். திடீரென சபீன் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்த காயமடைந்த சபீனையும், அவரது தாயாரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த காயம் அடைந்த சபீன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது தாயாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டனையில் கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ராணுவம் அத்து மீறி செயல்பட்டு வருவதாகவும் சபீன் குற்றம்சாட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து