முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர்களுக்கு எளிதில் விசா: அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க், அமெரிக்காவில் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில்,  இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர்களுக்கு எளிதில் விசா வழங்க வேண்டும் என அமெரிக்க பாராளுமன்றத்தில் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் தற்போது மக்கள் தொகை ஏற்ப போதிய டாக்டர்கள் இல்லை. அங்கு 10000 பேருக்கு 25 டாக்டர்கள் தேவைப்படுகின்றனர். குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள கிராமப்புறங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. இதைபோக்கும் விதமாக டாக்டர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவுக்கு பணிபுரிய வரும் டாக்டர்களுக்கு வழங்கப்படும் விசா முறையை எளிமைப்படுத்த வேண்டும் என அந்நாட்டு எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் பணிபுரிய வரும் டாக்டர்கள், மருத்துவ மாணவர்களுக்கு ஜெ-1 என்ற விசா வழங்கப்படுகிறது. தற்காலிக தேவைக்காக வழங்கப்படும் இந்த விசா பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் வெளி நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் டாக்டர்கள் சிரமப்படும் நிலையுள்ளது. விதிமுறையை எளிமைப்படுத்தி விரைவாக விசா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக கட்சி எம்பி கிரேஸ் மெங்க், குடியரசு கட்சியை சேர்ந்த எம்பி டாம் எம்மர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் விசா உடனடியாக அவர்களுக்கு கிடைக்க அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து