முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூண்டி ஏரிக்கு 84 கனஅடி தண்ணீர் கிடைத்தது: கிருஷ்ணா தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக பூண்டி, புழல், செம்பரப்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு மழை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இதில், பூண்டி ஏரிக்கு ஒரே நாளில் 84 கனஅடி தண்ணீர் வந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு  45 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.

இதேபோல் புழல் ஏரியில் 29 மி.மீட்டர் மழையும், செம்பரம்பாக்கத்தில் 32 மி.மீட்டர் மழையும், சோழவரத்தில் 16 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளதால் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர் 123 கனஅடியாக குறைந்து விட்டது. இப்போது பூண்டி ஏரியில் 360 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. (கொள்ளளவு 3232).

ஆந்திராவில் இருந்து 3 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்த்த நேரத்தில் 1.9 டி.எம்.சி. தண்ணீர்தான் கிடைத்துள்ளது. அதற்குள் கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தி விட்டனர். இனிமேல் ஜூலை மாதம்தான் கிருஷ்ணா தண்ணீர் கிடைக்கும். இதனால் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய மேட்டூர் அணை தண்ணீர் ஓரிரு நாளில் விராணத்துக்கு திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து