முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இன்று கன மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்றும் தென் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.வெள்ளிக்கிழமையன்று ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழையில் மரங்கள் ஒடிந்து விழுந்தன.ஒரு கோழிப்பண்ணையின் மேற்கூரை சேதமடைந்தது.பலத்த காற்றும் வீசியதால் அங்கு விளம்பர போர்டுகளும் பறந்தன.

நேற்றுமுன்தினம் பெய்த மழையில் காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலி புரத்திலும் தஞ்சாவூரில் உள்ள வல்லத்திலும் தலா 10செ.மீ மழைகொட்டியது. கடந்த 24மணி நேரத்தில் காட்டு மன்னார் கோவில்(கடலு◌ார் மாவட்டம்)  நீடா மங்கலம்(திருவாரூர்) ஆகிய இடங்களில் தலா 9செ.மீ மழை பெய்தது. திண்டிவனம்(விழுப்புரம்மாவட்டம்) உடுமலைப்பேட்டை(திருப்பூர்) மன்னார் குடி(திருவாரூர்) பாப நாசம்(தஞ்சாவூர்) ஆகிய இடங்களில் தலா 8செ.மீ மழை கொட்டியது. குடவாசல்(திருவாரூர்) கள்ளக்குறிச்சி(விழுப்புரம்) வலங்கைமான்(திருவாரூர்) கும்பகோணம்(தஞ்சாவூர்) ஆகிய பகுதிகளில் தலா 7செ.மீ மழை பெய்தது.

இதேப்போன்று சென்னை,திருவண்ணாமலை. திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் ஓரளவு மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் கன மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் ஓடியது. காங்கேயத்தில் நேற்று காலை 8.30மணி நிலவரப்படி கடந்த 24மணி நேரத்தில் 42மி.மீட்டர் மழைகொட்டியிருந்தது. தென் தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர் ரமணன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து