முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் 4418 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி ,கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு வழங்கினார்

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

மதுரை - மதுரையில்  4418 குடும்பங்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி,கிரைண்டர்,மின்விசிறிகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி, மதுரை வடக்கு வட்டத்திற்குட்பட்ட மதுரை மாநகராட்சி வார்டு எண்:4ல் உள்ள பழைய சம்மந்தர் ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த 4418 குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு நேற்று வழங்கினார்.  இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தலைமை வகித்தார்.
    இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:
  மக்களின் நலன் காப்பதற்காக பலகோடி மக்கள் பயனடையும் வகையில் பல ஆயிரம் திட்டங்களை மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் வகுத்து வழிகாட்டுதலின்படி தமிழகம் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டுள்ளது.  குறிப்பாக மகளிர் நலன் காப்பதற்காக அனைத்து திட்டங்களுமே மகளிர் பெயரிலேயே வழங்கப்படுகிறது.  ஒவ்வொரு திட்டமும் திட்டகாலத்தில் பயன்பெறுவது போக பிற்காலத்திலும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படுகிறது. 

உதாரணமாக விலையில்லா வெள்ளாடுகள் நம் மாவட்டத்தில் 17398 குடும்பங்களுக்கு தலா 4 ஆடுகள் வீதம் ரூ.22.75 கோடி மதிப்பீட்டில் 69,592 விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.  இவை 148792 குட்டிகளை ஈன்றுள்ளன.  இப்படி எதிர்காலத்திலும் பயன்பெறும் திட்டங்களை பொதுமக்கள் பெற்று பயனடைய வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.  

இவ்விழாவில்  மேயர் ராஜன்செல்லப்பா, ஆர்.கோபாலகிருஷ்ணன் எம்.பி,திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.முத்துராமலிங்கம், மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தமிழரசன், மாநகராட்சி துணை மேயர் கு.திரவியம், மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் புதூர் கே.துரைப்பாண்டியன், ஆவின் தலைவர் தங்கராமன்,பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, முன்னாள் கவுன்சிலர் எம்.எஸ்.பாண்டியன், 4வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.சண்முகம்,45 வது வார்டு கவுன்சிலர் புதூர் அபுதாகீர், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், ஆகியோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக தனித்துணை ஆட்சியர் (சிறப்பு திட்ட செயலாக்கம்) ச.கிரிஜாதேவி வரவேற்புரையாற்றினார்.  நிறைவாக மதுரை வடக்கு வட்டாட்சியர்  ராமன் அவர்கள் நன்றிகூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து