முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்திற்கான விமான சேவையை ஏர் இந்தியா மீண்டும் துவக்கியது

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் நேற்று மீண்டும் துவங்கியது. நேபாளத்தில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகி இருந்தது.  இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகின.

இந்நிலையில் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் நேற்று முன்தினம் மூடப்பட்டது. இதையடுத்து காத்மாண்டுவுக்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் நேற்று முன்தினம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. திரிபுவன் விமான நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து காத்மாண்டுவுக்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் துவங்கியுள்ளது.

நேற்று காலை 7.30 மணி அளவில் டெல்லியில் இருந்து 118 பேருடன் ஒரு ஏர் இந்தியா விமானமும், கொல்கத்தாவில் இருந்து 45 பேருடன் ஒரு விமானமும் காத்மாண்டுவுக்கு சென்றது.இந்தியாவில் இருந்து தினமும் 3 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் காத்மாண்டுவுக்கு இயக்கி வருகிறது. அதில் 2 விமானங்கள் டெல்லியில் இருந்து செல்கின்றன. கொல்கத்தாவில் இருந்து காத்மாண்டுவுக்கு வாரத்திற்கு 4 முறை விமானம் இயக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் ஏர் இந்தியா தவிர பிற நிறுவனங்களும் காத்மாண்டுவுக்கான விமான சேவையை நிறுத்தியிருந்ததும், ஏர் இந்தியா தவிர தனியார் நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகியவையும் காத்மாண்டுவுக்கு விமானங்களை இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து