முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் 125 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

காத்மண்டு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் மகாராஷ்டிரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 125 இந்தியர்கள் சிக்கி தவித்து வருவதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரிலிருந்து நேபாளத்துக்கு புனித யாத்திரை சென்ற சுமார் 80 பேரும், பனிச்சறுக்கு சாகசம் செய்ய 15 – 20 பேரும் சென்றுள்ளதாக டெல்லியில் உள்ள மகாராஷ்டிர தகவல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது,

நேபாளத்தில் எங்கள் மாநிலத்தவரின் பாதுகாப்பு குறித்து உள்ளூரில் இருந்து எங்களுக்கு அழைப்புகள் வருகின்றன. ஆனால் நேபாளம் சென்றவர்களை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார். இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து பசுபதிநாதர் கோயிலுக்கு சென்ற 25 பேர் பத்திரமாக இருப்பதாக அவர்களை அழைத்துச் சென்ற சுற்றுலா ஏற்பாட்டாளர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது,  நிலநடுக்கத்தை உணர்ந்தவுடன் ஓட்டலின் 4வது மாடியில் இருந்து கீழே ஓடிவந்தேன். என்னுடன் வந்த அனைவரும் காத்மண்டுவில் பசுபதிநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள மைதானத்தில் பத்திரமாக இருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக எங்கள் ஓட்டல் சேதம் அடையவில்லை. அருகில் உள்ள பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன என்று தெரிவித்தார். ஐதராபாத்தில் இருந்து கடந்த 17ம் தேதி புறப்பட்ட இக்குழுவினர், வாரணாசி சென்ற பிறகு ஐதராபாத் திரும்ப திட்டமிட்டிருந்தனராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து