முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா, கேரளாவில் லேசான நில அதிர்வு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

கொச்சி: ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களிலும் நேற்று முன்தினம் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.  கேரள மாநிலம் கொச்சி, கல்லூர், கடவந்தரா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவாகி இருந்தது. இந்த நில அதிர்வு சில வினாடிகள் நீடித்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

நில அதிர்வு ஏற்பட்ட உடன் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும்,  மக்கள் பீதியில் குடியிருப்புகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்ததாகவும் கூறப்படுகிறது. நில அதிர்வி னால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் நேற்று முன்தினம் காலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்து சாலைகளில் குவிந்தனர். விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா, அமலாபுரம், ராஜமுந்திரி, ராவுலபாளையம், ஸ்ரீகாகுளம், ஏலூரு ஆகிய நகரங்களில் நேற்று முன்தினம் காலை 11.40 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் சிலரது வீடுகளில் பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்துள்ளன. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.  சில மணி நேரம் வரை அவர்கள் அச்சத்துடன் சாலைகளிலேயே குடும்பத்துடன் காத்திருந்தனர். நிலநடுக்கம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். நிலநடுக்கம் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து