முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் மீண்டும் நில அதிர்வு: வடமாநிலங்களில் தொடரும் பீதி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: நிலநடுக்கத்தால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய நேபாள எல்லைகளை ஓட்டியுள்ள மாநிலங்களிலும் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. இதில் பீகாரை நிலநடுக்கம் கடுமையாக தாக்கியது. பீகாரிலும் 7.9 ரிக்டர் அளவுக்கு பாதிப்பு உணரப்பட்டதாக தெரிகிறது. இதனால் பீகாரில் பல்வேறு பகுதிகளிலும் கட்டிடங்கள், குடியிருப்புகள் பகுதிகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், காயமடைந்தவர்கள் சிலர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பீகாரில் இறந்தவர்களின் எண்ணிகை 42ஆக அதிகரித்தது.64பேர் காயம் அடைந்தார்கள்.

பீகாரில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்த முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். நிலைமைகள் குறித்து நிதிஷிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நில நடுக்கம் பாதிக்கப்பட்ட இடங்களில் இரண்டு தினங்களுக்கு பிஎஸ்என் எல் தனது சேவையை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. அதே போல் உத்திரப்பிரதேசத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இரண்டு மாநிலங்களில்  100க்கும் மேற்ப்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியன் ரயில்வே நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் தண்ணீர் பாட்டில்களை நிலநடுக்கம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

நேபாளத்தில் தவித்து வரும் பெண்கள் கால்பந்து குழுவினரை மீட்பதில் முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் இந்தியாவைச் சேர்நஅத கால்பந்து குழு பெண்கள் 18 பேரை மீட்க கவனம் செலுத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் இந்தியாவில் மீண்டும் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதில் இதில் நேற்று முன் தினம் 11.13 மணிக்கும், பின்னர் நேற்று அதிகாலை 4.46 மணிக்கும் உணரப்பட்டது. இLு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அதே நேரத்தில் கடந்த முறையைப் போன்று சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இருந்த போதிலும் மீண்டும் தோன்றிய நில அதிர்வு காரணமாக வட மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மை மையத்தில் மத்திய அமைச்சரவை செயலாளர் அஜித் சேத் தலைமையில் நேற்று பிற்பகலில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பிரதமர் அலுவலக அதிகாரிகள், உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 237 பேர் படுகாங்களுடன் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதே போல் உத்தரபிரதேசத்தில்  பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகளை முதல்வர் அகிலேஷ் முடுக்கிவிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம். இதற்காக 10 லாரிகள் மூலமாக தண்ணீர், உணவு பொட்டலங்கள், 10 லாரிகளில் பிஸ்கெட்டுகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மாவட்ட கலெக்டர்கள் விரைந்து சென்று நிவாரண பணிகளை விரைவுபடுத்தவும் அகிலேஷ்  உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக 24  மணிநேரமும் இயங்கக் கூடிய அவசர உதவி அழைப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்கம் ,ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நேற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நில நடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக் கை 13 ஆக அதிகரித்தது.நேற்று 8 வயது சிறுமி பலியானாள்.இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை அந்தமாநிலத்தில் அதிகரித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து