முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு போப் பிரான்சிஸ் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

வாடிகன்: நேபாள நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியானது குறித்து போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கும், நேபாள மக்களுக்கும் அவர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 2000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும், 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணி நடந்து வருகிறது. நேபாளத்தின் பல புராதன சின்னங்கள், கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தில் இடிந்து போய் விட்டன. நேபாளம் பெரும் சேதத்தையும் சந்தித்துள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு போப் பிரான்சிஸ் தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வாடிகன் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மூலம் நேபாள கத்தோலிக்க அமைப்புக்கு அனுப்பியுள்ள செய்தியில், ‘நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், மீட்புபணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது பணியை தொடர்ந்து மேற்கொண்டு சேவையாற்றிடுமாறும்' கூறியுள்ளார் போப்பாண்டவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து