முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இ-மெயில் உளவு பார்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: ரிக்க அதிபர் ஒபாமா வின் இ-மெயில், ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர் சால் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை வெள்ளை மாளிகை வட்டாரங்கள் மறுத்ததுடன், இணையதள ஊடுருவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கணினியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கணினியில் அதிநவீன தொழில் நுட்பமும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இணையதள குற்றங்களும் நாளுக்குநாள் பெருகிவருகின்றன. இணையதளத்தை ஊடுருவி சிலர் மற்றவர்களின் ரகசியங்களை திருடுவது, இணையதளத்தை முடக்குவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் ஹேக்கர்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர்.

தனிநபர்களின் ரகசியங்களை திருடுவதோடு மட்டுமின்றி, அண்டைய நாடுகள் மற்றும் எதிரி நாடுகளின் ராணுவ ரகசியங்களை தெரிந்து கொள்கின்றனர். அந்தவகையில், கடந்தாண்டு அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் இ - மெயிலுக்குள் ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் ஊடுருவி சிலரகசியங்களை அறிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒபாமாவின் பயணம், அவர் எடுக்கும் முக்கிய முடிவுகள், உத்தரவுகள் உள்ளிட்டவற்றை இணையதள ஊடுருவாளர்கள் அறிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதை வெள்ளை மாளிகை வ்டடாரங்கள் மறுத்துள்ளன. முக்கிய ரகசியங்களை யாரும் அறிந்துகொள்ள முடியாதவகையில், கணினி பிரிவில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். எனவே எளிதாக யாரும் இணையதளத்தில் ஊடுருவி ரகசியங்களை திருடிவிட முடியாது என பாதிகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இணையதள ஊடுருவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் முக்கிய ரகசியங்களை அறிந்துகொள்ளும் வகையில், இணையதளங்களில் ஊடுருவல் நடப்பதாக கடந்த சில மாதங்களாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து