முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாள பூகம்பத்தில் சிக்கி டெல்லி திரும்பிய தமிழ்ப்பெண்கள் கண்ணீர் மல்க பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

நகரி, ஏப் 27: நேபாளம் பூகம்பத்தில் சிக்கிய இந்திய சுற்றுலா பயணிகள் 550 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். இவர்களில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 28 பேரும் அடங்குவார்கள். இவர்களை ஐதராபாத் எல்.பி.நகரில் உள்ள ஸ்ரீசாய்பாபா டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கவுரிசங்கர் நேபாளம் அழைத்து சென்றார்.

கடந்த 17ம் தேதி அவர்கள்  புறப்பட்டனர். விஜயவாடாவில் இருந்து ரயிலில் மேற்கு வங்காள மாநிலம் கோரக்பூர் சென்றடைந்த அவர்கள் அங்கிருந்து பஸ்சில் நேபாளம் பயணமானார்கள். வழியில் பல கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். நேற்று முன்தினம் அனைவரும் காத்மண்டு அருகே உள்ள பசுபதிநாதர் கோவிலில் தரிசனம் செய்தனர். அப்போதுதான் நில நடுக்கம் ஏற்பட்டது.

இவர்கள் இருந்த பகுதியிலும் பூமி அதிர்ந்தது. உடனே அனைவரும் பதறி ஓடினார்கள். எங்கே ஒதுங்குவது என்று தெரியாமல் தவித்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அங்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சிறிது நேரத்தில் இயல்பு திரும்பியதால் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனாலும் எப்படி ஊர் திரும்புவது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

ஆனால் அவர்களுடன் சென்ற டிராவல்ஸ் நிறுவனத்தினர் இந்திய தூதரகத்துடன் பேசி அனைவரும் பத்திரமாக திரும்ப உதவி செய்தனர். நேற்று இந்திய விமானம் மூலம் அனைவரும் டெல்லி திரும்பினர். ஆந்திர பவனில் தங்க வைக்கப்பட்டு இருந்த அவர்களில் தமிழர்களும் இருந்தனர். அவர்கள் கூறியதாவது,

நாங்கள் பசுபதிநாதரை வழிபட்டு திரும்பிய போது நிலநடுக்கம் ஏற்பட்டது. எங்கே ஒதுங்குவது என்று தெரியாமல் நாலாபுறமும் சிதறி ஓடினோம். கட்டிடம் இல்லாத இடத்தை தேடிசென்று தஞ்சம் அடைந்தோம். நல்லவேளை எங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. நாங்கள் வழிபட்ட கடவுள்தான் எங்கள் உயிரை காப்பாற்றி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். உயிர் தப்பி வந்த தமிழ் பெண்கள் இந்திய விமான படையினர் உதவியை வெகுவாக பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து