முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மழலையர் வகுப்பு தமிழக அரசுக்கு சரத்குமார் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மழலையர் வகுப்பு தொடங்கப்பட உள்ளதற்கு, தமிழக அரசுக்கு சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தனியார் பள்ளிகளில் பிரி கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற மழலையர் வகுப்புகள் நடத்தப்படுவது போன்ற அரசுப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்துள்ளது.  தங்கள் சக்திக்கு மீறிய கட்டணம், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் கெடுபிடிகள் போன்ற காரணங்களால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளின் குழந்தைப் பருவ தொடக்க நிலைக் கல்வி பற்றிய கனவு கனவாகவே இருந்து வருவதை சுட்டிக்காட்டி அரசு மழலையர் வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், காரணத்தையும் வலியுறுத்தி வந்தோம். 2010-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மாநாட்டிலேயே இதுகுறித்து தீர்மானம் கொண்டு வந்தோம்.

அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி 165 பள்ளிகளில் மழலையர் வகுப்புகளைத் தொடங்க இருப்பதாக இன்று வந்துள்ள செய்தி, மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், ஏழை, எளிய, நடுத்தர பெற்றோர்களின் கனவுகளை மெய்ப்பிக்கும் விதமாகவும் அமைந்த நடவடிக்கை என்ற வகையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பாராட்டுக்களையும், வரவேற்புகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதே நடைமுறையை தமிழகத்தின் பிற மாநகராட்சிகளிலும், குறிப்பாக கிராமப் பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன்.

சென்னை மாநகராட்சி தற்போது மேற்கொண்டிருக்கும் முயற்சியும், தொடர்ந்து தமிழகம் எங்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும் தமிழகத்தில் மற்றுமொரு கல்விப் புரட்சி ஏற்பட வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு தொடங்க வழிவகுத்த மாநகராட்சிக்கும், தமிழக அரசுக்கும் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து