முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் இந்திய இளம் கால்பந்து: வீராங்கனைகள் தவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

காத்மாண்டு: நேபாளத்தில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டதால் அங்கு விளையாடச்சென்ற 14வயதுக்கு உட்பட்டஇளம்  இந்திய கால்பந்து வீராங்கனைகள் கால்பந்து அணியினர் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

நேபாளத்தில் சனிக்கிழமையன்று 7.9ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 2200 பேர் மரணம் அடைந்துள்ளனர்.நில நடுக்கத்தால் உருக்குலைந்துள்ள அந்த நாட்டில் விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

நில நடுக்கம் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் அந்த நாட்டிற்கு கால்பந்து போட்டிகளில் ஆட இந்தியாவில் இருந்து 14வயதுக்கு உட்பட்ட இந்திய பெண்கள் கால்பந்து அணி சென்றிருந்தது.அவர்கள்  ஆசிய கால்பந்து பெடரேஷனின் பிராந்திய சாம்பியன்ஷிப் போட்டிகளில் (தெற்கு-மத்திய மண்டலம்) ஆடுவதற்காக காத்மாண்டுவிற்கு சென்றிருந்தனர்.

நேபாளத்தில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படுவதால் காத்மாண்டுவின் திரிபுவன் சர்வ தேச விமான நிலையத்தில் இருந்து விமான போக்குவரத்து சேவை மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இந்திய பெண்கள் கால்பந்து அணியினரை அழைத்து வருவதற்கு இந்திய விமானம் ஒன்று நேற்று மதியம்12.30 மணிக்கு புறப்பட்டதாக இந்திய கால்பந்து பெடரேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து