முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளம் நில நடுக்கத்தில் பலி 2,200ஆக அதிகரிப்பு 5,654பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

காத்மாண்டு: நேபாளம் நில நடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிகை 2ஆயிரத்து 200 ஆக அதிகரித்தது. 5ஆயிரத்து654பேர் காயம் அடைந்தார்கள். நேபாளம்,இந்தியா உள்பட 4 தெற்கு ஆசிய நாடுகளில் நேற்றுமுன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.நேபாளத்தில் 7.9ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் நேபாளத்தில் பலியானவர்களின் எண்ணிகை 2 ஆயிரத்து 200ஆக அதிகரித்தது. 5ஆயிரத்து654பேர் காயம் அடைந்தார்கள்.

அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் இருந்ததால் மக்கள் வீட்டிற்குள் செல்லாமல் கடும் குளிரில்  சாலையிலேயே கடும் குளிரில் இரவு முழுவதும் இருந்தனர். தெற்கு ஆசியாவில் ஏழை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடருக்கு இந்தியாஉள்பட அருகாமையில் உள்ள நாடுகள் உதவிக்கரம் நீட்டின. அந்த நாட்டில் நேற்றும் இரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தார்கள். நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் மட்டும் 1,053பேர் பலியானார்கள். இறந்தவர்களின் எண்ணிக் கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அஞ்சினர்.நேற்று நேபாளத்தில் 6.7ரிக்டர் அளவிலும் பின்னர் 6.5ரிக்டர் அளவிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

இதனால் மக்கள் திறந்த வெளி இடங்களை நோக்கி மக்கள் ஒடினார்கள். நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் பனி சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 22பேர் இறந்தனர். 61 பேர் காயம் அடைந்தார்கள். இந்தியா உள்பட சர்வதேச குழுக்கள் அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்டன. பெரும் துயர நிகழ்வான இந்த நில நடுக்கத்தைத்தொடர்ந்து நேபாளத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

நில நடுக்கத்தில் பெரும் கட்டிடங்களும் கோவில்களும் இடிந்து தலை மட்டமாக ஆகின.அந்த இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை  மீட்பதில் மீட்புக்குழுவினர் தீவிரம் காட்டினர்.  நில நடுக்கத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படையின் 17 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டதால் நேபாளத்தில் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து