முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூகம்பத்தில் உயிரிழப்பு: தமிழக தலைவர்கள் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: பூகம்பத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதற்கு தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:–

நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். திபெத், வங்கதேசம் மற்றும் இந்தியாவின் உத்தர பிரதேசம், பிகார், மேற்குவங்கம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும் வேதனை அளிக்கிறது.
நேபாளத்தில் நில நடுக்கம் தாக்கிய செய்தி கிடைத்ததும் அந்நாட்டிற்கு தேவையான உதவிகளை செய்ய இந்திய அரசு முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. நேபாளத்தில் நில நடுக்கம் தாக்கிய பகுதிகளில் இந்தியர்கள் பலர் சிக்கித் தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர்:–

நேபாளத்தில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நம்மையெல்லாம் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.
காட்மாண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல நகரங்கள், கிராமங்கள் என பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இந்த நில அதிர்வில் சிக்கி, குடும்பத்துடன் புதையுண்டு போயிருக்கிறார்கள். பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இந்த நில அதிர்வின் மூலம் பலர் உயிரிழந்துள்ளனர் என்பது மிகுந்த வேதனைக்குறியதாகும். இயற்கையின் கொடுஞ் சீற்றத்தை மனிதனால் வெல்ல முடியாது என்றாலும், நிலைமையின் ஆபத்தை ஓரளவிற்கு தடுக்க முடியும். அந்த வகையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நிவாரண பணிகளில் இந்திய ஜனநாயக கட்சியும் தன்னை இணைத்துக் கொள்ளும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து